وَجَآءَ ٱلسَّحَرَةُ فِرۡعَوۡنَ قَالُوٓاْ إِنَّ لَنَا لَأَجۡرًا إِن كُنَّا نَحۡنُ ٱلۡغَٰلِبِينَ ١١٣
113. (அவ்வாறு அனுப்பியதில் பல திசைகளிலும் இருந்த) சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னிடம் வந்து நாங்கள் ‘‘(மூஸாவை) ஜெயித்துவிட்டால் நிச்சயமாக எங்களுக்கு (அதற்குரிய) வெகுமதி உண்டு (அல்லவா?)'' என்று கேட்டனர்.
தஃப்ஸீர்
7.113. பிர்அவ்ன் சூனியக்காரர்களை ஒன்றுதிரட்டக்கூடியவர்களை அனுப்பினான். சூனியக்காரர்கள் வந்த போது அவர்கள் பிர்அவ்னிடம் கேட்டார்கள், “நாங்கள் மூஸாவை மிகைத்து அவரை வென்று விட்டால் எங்களுக்கு ஏதேனும் வெகுமதி உண்டுமா?”