ஸூரா Al-A'raf, வசனம் 108

7:108

وَنَزَعَ يَدَهُۥ فَإِذَا هِيَ بَيۡضَآءُ لِلنَّٰظِرِينَ ١٠٨

108. மேலும், அவர் தன் கையை (சட்டைப் பையிலிட்டு) வெளியில் எடுத்தார். அது பார்ப்பவர்களுக்கு மிக வெண்மையானதாக(வும், மிக பிரகாசமானதாகவும்) இருந்தது.

தஃப்ஸீர்

7.108. தம் நெஞ்சுப் பகுதியிலுள்ள சட்டையின் உள்ளிருந்து அல்லது தம் அக்குளுக்குக் கீழிலிருந்து கையை வெளியே எடுத்ததும் அது வெண்குஷ்டமற்ற வெண்மையாகக் காணப்பட்டது. அதன் அதீத வெண்மையினால் பார்ப்பவர்களுக்கு அது மின்னியது.