ஸூரா Al-Anfal, வசனம் 21

8:21

وَلَا تَكُونُواْ كَٱلَّذِينَ قَالُواْ سَمِعۡنَا وَهُمۡ لَا يَسۡمَعُونَ ٢١

21. (நம்பிக்கையாளர்களே! மனமாற) செவியுறாது ‘‘செவியுற்றோம்'' என்று (வாயால் மட்டும்) கூறியவர்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம்.

தஃப்ஸீர்

8.21. -நம்பிக்கையாளர்களே!- நயவஞ்சகர்களைப் போன்று, இணைவைப்பாளர்களைப் போன்று ஆகிவிடாதீர்கள். அவர்களிடம் அல்லாஹ்வின் வசனங்கள் எடுத்துரைக்கப்பட்டால், கேட்பவற்றின் மூலம் அறிவுரை பெறுவதற்காக, அவற்றைச் சிந்தித்து படிப்பினை பெறும் விதத்தில் கேட்காமல், “எங்களிடம் ஓதிக்காட்டப்படும் குர்ஆனை நமது செவிகளினால் செவியேற்றுக் கொண்டோம்” என்று கூறுகிறார்கள்.