ஸூரா Al-Anbiya, வசனம் 26

21:26

وَقَالُواْ ٱتَّخَذَ ٱلرَّحۡمَٰنُ وَلَدٗاۗ سُبۡحَٰنَهُۥۚ بَلۡ عِبَادٞ مُّكۡرَمُونَ ٢٦

26. (அவ்வாறிருந்தும்) ரஹ்மான் (வானவர்களை தனக்குப் பெண்) சந்ததியாக்கிக் கொண்டான் என்று இவர்கள் கூறுகின்றனர். அவனோ மிகப் பரிசுத்தமானவன். (வானவர்கள் அவனுடைய சந்ததிகளன்று,) எனினும், (அவனுடைய) கண்ணியமிக்க அடியார்கள் ஆவர்.

தஃப்ஸீர்

21.26. இணைவைப்பாளர்கள் கூறுகிறார்கள்: “அல்லாஹ் வானவர்களை மகள்களாக ஆக்கிக் கொண்டான், என்று.” அவர்கள் கூறும் பொய்களைவிட்டும் அல்லாஹ் தூய்மையானவன். மாறாக வானவர்கள் அல்லாஹ்வுக்கு நெருக்கமான, கண்ணியமான அடியார்களாவர்.