ஸூரா Al-An'am, வசனம் 46

6:46

قُلۡ أَرَءَيۡتُمۡ إِنۡ أَخَذَ ٱللَّهُ سَمۡعَكُمۡ وَأَبۡصَٰرَكُمۡ وَخَتَمَ عَلَىٰ قُلُوبِكُم مَّنۡ إِلَٰهٌ غَيۡرُ ٱللَّهِ يَأۡتِيكُم بِهِۗ ٱنظُرۡ كَيۡفَ نُصَرِّفُ ٱلۡأٓيَٰتِ ثُمَّ هُمۡ يَصۡدِفُونَ ٤٦

46. ‘‘அல்லாஹ், உங்கள் கேள்விப்புலனையும் பார்வைகளையும் எடுத்து விட்டு உங்கள் உள்ளங்களின் மீது முத்திரை வைத்துவிட்டால், அல்லாஹ்வை அன்றி எந்த இறைவன் அவற்றை உங்களுக்குக் கொடுப்பான் என்பதை நீங்கள் சிந்தித்தீர்களா?'' என்று (நபியே!) (அவர்களைக்) கேட்பீராக. (நம் ஆற்றலுக்குரிய) அத்தாட்சிகளை எவ்வாறு (விதவிதமாக) விவரிக்கிறோம் என்பதை நீர் கவனிப்பீராக. (இவ்வாறிருந்தும்) பின்னும் அவர்கள் புறக்கணித்தே வருகின்றனர்.

தஃப்ஸீர்

6.46. தூதரே! இந்த இணைவைப்பாளர்களிடம் நீர் கேட்பீராக: “அல்லாஹ் உங்களின் கேட்கும் திறனைப் பறித்து செவிடனாகவும், பார்வையைப் பறித்து குருடனாகவும், எதையும் புரிந்துகொள்ள முடியாதவாறு உங்கள் உள்ளங்களின் மீது முத்திரையிட்டும் விட்டால், அல்லாஹ்வைத் தவிர நீங்கள் இழந்தவற்றைத் திருப்பித் தரும் இறைவன் யார்?” தூதரே! நாம் எவ்வாறு விதவிதமாக அவர்களுக்கு ஆதாரங்களைத் தெளிவுபடுத்துகிறோம் என்பதைக் கவனிப்பீராக! பின்னரும் அவர்கள் அவற்றைப் புறக்கணிக்கிறார்கள்.