فَقُطِعَ دَابِرُ ٱلۡقَوۡمِ ٱلَّذِينَ ظَلَمُواْۚ وَٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ٤٥
45. ஆகவே, அநியாயம் செய்து கொண்டிருந்த (அந்த) மக்களின் வேர் அறுபட்டுவிட்டது. எல்லாப் புகழும் அகிலத்தாரின் இறைவன் அல்லாஹ்வுக்கே!
தஃப்ஸீர்
6.45. நிராகரிப்பாளர்கள் அடியோடு அழிக்கப்பட்டார்கள். அல்லாஹ் தன் தூதர்களுக்கு உதவிசெய்தான். தனது எதிரிகளை அழித்து தனது நேசர்களுக்கு உதவி புரிந்ததற்காக, நன்றியும் புகழும் அகிலங்களைப் படைத்துப் பராமரிக்கும் அல்லாஹ்வுக்கே உரியதாகும்.