وَهُوَ ٱلَّذِي جَعَلَكُمۡ خَلَٰٓئِفَ ٱلۡأَرۡضِ وَرَفَعَ بَعۡضَكُمۡ فَوۡقَ بَعۡضٖ دَرَجَٰتٖ لِّيَبۡلُوَكُمۡ فِي مَآ ءَاتَىٰكُمۡۗ إِنَّ رَبَّكَ سَرِيعُ ٱلۡعِقَابِ وَإِنَّهُۥ لَغَفُورٞ رَّحِيمُۢ ١٦٥
165. அவன்தான் உங்களை பூமியில் முன் சென்றவர்களின் இடத்தில் வைத்தான். உங்களில் சிலரை மற்றவர்களைவிட அந்தஸ்தில் உயர்த்தியும் இருக்கிறான். (இதன் மூலம்) உங்களுக்குக் கொடுத்தவற்றில் (நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்று) உங்களைச் சோதிக்கிறான். நிச்சயமாக உமது இறைவன் தண்டிப்பதில் மிகத் தீவிரமானவன். ஆயினும், நிச்சயமாக அவன் மிக்க பிழை பொறுப்பவன், பெரும் கருணையுடையவன் ஆவான்.
தஃப்ஸீர்
6.165. பூமியை நிர்வகிப்பதற்காக, அதில் உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களுக்குப் பிறகு உங்களை வழித்தோன்றல்களாக அல்லாஹ்வே ஆக்கினான். உங்களுக்கு வழங்கியவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக படைப்பிலும் வாழ்வாதாரத்திலும் ஏனைய விடயங்களிலும் உங்களில் சிலரை சிலரை விட உயர்த்தியுள்ளான், தூதரே! உம் இறைவன் தண்டனை வழங்குவதில் விரைவானவன். வரக்கூடிய ஒவ்வொன்றும் அண்மையிலேயே உள்ளன. தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அவன் மன்னிக்கக்கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.