ஸூரா Al-An'am, வசனம் 160

6:160

مَن جَآءَ بِٱلۡحَسَنَةِ فَلَهُۥ عَشۡرُ أَمۡثَالِهَاۖ وَمَن جَآءَ بِٱلسَّيِّئَةِ فَلَا يُجۡزَىٰٓ إِلَّا مِثۡلَهَا وَهُمۡ لَا يُظۡلَمُونَ ١٦٠

160. எவரேனும் ஒரு நன்மையைச் செய்தால் அவருக்கு அதைப்போல் பத்து பங்கு (நன்மை) உண்டு. எவரேனும் ஒரு தீமையைச் செய்தால் அதைப் போன்றதே அன்றி (அதிகமாக) அவருக்குக் கூலி கொடுக்கப்பட மாட்டாது. (குற்றத்திற்கு அதிகமான தண்டனையைக் கொடுத்தோ அல்லது நன்மைக்குரிய கூலியைக் குறைத்தோ) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.

தஃப்ஸீர்

6.160. மறுமைநாளில் ஒரு நன்மையோடு வரும் நம்பிக்கையாளனின் நன்மையை அல்லாஹ் பத்து மடங்காக்குவான். ஒரு தீமையோடு வருபவர் கூடுதல், குறைத்தல் என்பவற்றில் அதற்கேற்பவே தண்டிக்கப்படுவார். துிமையை விட அதிக தண்டனை வழங்கப்படமாட்டாது. மறுமை நாளில் நன்மைகளின் கூலி குறைக்கப்பட்டோ தீமைகளுக்கான தண்டனை அதிகரிக்கப்பட்டோ அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.