ஸூரா Al-An'am, வசனம் 146

6:146

وَعَلَى ٱلَّذِينَ هَادُواْ حَرَّمۡنَا كُلَّ ذِي ظُفُرٖۖ وَمِنَ ٱلۡبَقَرِ وَٱلۡغَنَمِ حَرَّمۡنَا عَلَيۡهِمۡ شُحُومَهُمَآ إِلَّا مَا حَمَلَتۡ ظُهُورُهُمَآ أَوِ ٱلۡحَوَايَآ أَوۡ مَا ٱخۡتَلَطَ بِعَظۡمٖۚ ذَٰلِكَ جَزَيۡنَٰهُم بِبَغۡيِهِمۡۖ وَإِنَّا لَصَٰدِقُونَ ١٤٦

146. (நபியே!) நகத்தையுடைய பிராணிகள் (பிளவில்லாத குளம்புகளை உடைய ஒட்டகை, தீப்பறவை, வாத்து போன்ற) அனைத்தையும் (புசிக்கக் கூடாது என்று) யூதர்களுக்கு நாம் தடுத்திருந்தோம். மேலும், ஆடு, மாடு ஆகியவற்றிலும், அவற்றின் முதுகிலோ அல்லது வயிற்றிலோ அல்லது எலும்புடன் கலந்தோ உள்ளவற்றைத் தவிர (மற்ற பாகங்களில் உள்ள) கொழுப்புக்களையும் நாம் அவர்களுக்கு விலக்கியே இருந்தோம். அவர்கள் (நமக்கு) மாறு செய்ததற்குத் தண்டனையாக இவ்வாறு (தடுத்துத்) தண்டித்து இருந்தோம். நிச்சயமாக நாம்தான் உண்மை கூறுகிறோம். (இதற்கு மாறாகக் கூறும் யூதர்கள் பொய்யர்களே!)

தஃப்ஸீர்

6.146. யூதர்களுக்கு ஒட்டகம், தீக்கோழி போன்ற நகங்களுடைய பிராணிகள் அனைத்தையும் ஆடு, மாடு ஆகியவற்றின் கொழுப்புகளையும் அவற்றின் முதுகுகளிலோ குடல்களிலோ பித்தட்டு, விலா எழும்பு போன்ற எலும்புகளிலோ ஒட்டியுள்ள கொழுப்புகளைத் தவிர நாம் தடைசெய்தோம். அவர்கள் செய்த அக்கிரமத்தினால் நாம் இவற்றை அவர்கள் மீது தடைசெய்தோம். நாம் தெரிவிக்கும் ஒவ்வொன்றிலும் நிச்சயமாக நாம் உண்மையாளர்களே.