وَإِذَا جَآءَتۡهُمۡ ءَايَةٞ قَالُواْ لَن نُّؤۡمِنَ حَتَّىٰ نُؤۡتَىٰ مِثۡلَ مَآ أُوتِيَ رُسُلُ ٱللَّهِۘ ٱللَّهُ أَعۡلَمُ حَيۡثُ يَجۡعَلُ رِسَالَتَهُۥۗ سَيُصِيبُ ٱلَّذِينَ أَجۡرَمُواْ صَغَارٌ عِندَ ٱللَّهِ وَعَذَابٞ شَدِيدُۢ بِمَا كَانُواْ يَمۡكُرُونَ ١٢٤
124. அவர்களிடம் ஒரு வசனம் வந்தால் ‘‘அல்லாஹ்வுடைய தூதர்களுக்குக் கொடுக்கப்பட்டது போன்ற (நபித்துவத்)தை எங்களுக்கும் கொடுக்கப்படாத வரை நாங்கள் (அதை) நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்'' என்று கூறுகின்றனர். நபித்துவத்தை எங்கு (எவருக்கு) அளிப்பது என்பதை அல்லாஹ்தான் நன்கறிவான். குற்றம் செய்யும் இவர்களை இவர்கள் செய்யும் சதியின் காரணமாக அல்லாஹ்விடமிருந்து சிறுமையும், கொடிய வேதனையும் அதிசீக்கிரத்தில் வந்தடையும்.
தஃப்ஸீர்
6.124. நிராகரிப்பாளர்களின் தலைவர்களிடம் அல்லாஹ் தன் தூதருக்கு இறக்கிய வசனங்களில் ஏதேனும் ஒரு வசனம் வந்தால், “தூதர்களுக்கு அல்லாஹ் அளித்த தூதுத்துவத்தைப் போல் எங்களுக்கும் அளிக்காத வரை நாங்கள் இதனை உண்மைப்படுத்த மாட்டோம்” என்று கூறுகிறார்கள். தூதுத்துவத்திற்கும் அதன் சுமைகளைத் தாங்குவதற்கும் தகுதியானவர்களை அல்லாஹ் அறிவான். இந்த அக்கிரமக்காரர்கள் சத்தியத்தைவிட்டும் கர்வம் கொண்டதனால் இழிவுக்கும் சூழ்ச்சி செய்ததனால் கடுமையான வேதனைக்கும் ஆளாவார்கள்.