أَنَّىٰ لَهُمُ ٱلذِّكۡرَىٰ وَقَدۡ جَآءَهُمۡ رَسُولٞ مُّبِينٞ ١٣
13. (அந்நேரத்தில் அவர்களின்) நல்லுணர்ச்சி எவ்வாறு அவர்களுக்குப் பயனளிக்கும்? நிச்சயமாக (நமது) தெளிவான தூதர் (இதற்கு முன்னர்) அவர்களிடம் வந்தே இருக்கிறார்.
தஃப்ஸீர்
44.13. தெளிவான தூதுடன் அவர்களது நம்பிக்கைக்குரிய, உண்மையான தூதர் அவர்களிடம் வந்தபோது ஏற்றுக்கொள்ளாமல் தற்போது இறைவனிடம் மன்றாடி நினைவு கூறுவது எவ்வாறு அவர்களுக்குப் பயனளிக்கும்?