ரமலான் 2027
எதிர்பார்க்கப்படும் தேதி
திங்கள், 8 பிப்ரவரி, 2027
1 ரமலான் 1448 ஹிஜ்ரி
திங்கள், 8 மார்ச், 2027 வரை
தேதிகள் சவூதி அரேபியாவின் உம்முல் குரா நாட்காட்டியின்படி உள்ளன. உள்ளூரில் பிறை பார்த்து மாதம் தொடங்கும் இடங்களில் தேதி ஒரு நாள் முன்னதாகவோ பின்னதாகவோ இருக்கலாம்.
ரமலான் ஹிஜ்ரி நாட்காட்டியின் ஒன்பதாவது மாதம், கடமையான நோன்பின் மாதம். முஸ்லிம்கள் 29 அல்லது 30 நாட்கள் ஒவ்வொரு நாளும் அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை நோன்பு நோற்கின்றனர். குர்ஆன் இறங்கத் தொடங்கியதும் இந்த மாதத்தில்தான்.
குர்ஆன் மற்றும் சுன்னாவிலிருந்து
- மாதத்தின் ஒவ்வொரு நாளும் அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை நோன்பு நோற்கவும். (குர்ஆன் 2:183)
- ஈமானுடனும் நன்மையை எதிர்பார்த்தும் இரவில் தொழவும் (தராவீஹ்). (புகாரி, முஸ்லிம்)
- அதிகாலைக்கு முன் ஸஹர் உண்ணவும், அதில் பரக்கத் உள்ளது. (புகாரி, முஸ்லிம்)
- நபி ﷺ ரமலானில் செய்தது போல குர்ஆன் ஓதி, தாராளமாகத் தர்மம் செய்யவும். (புகாரி, முஸ்லிம்)
ஹதீஸ்
عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ» நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : "இறைநம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் ரமழானில் நோன்பு நோற்றவரின் முன்சென்ற (சிறு)பாவங்கள் மன்னிக்கப்படும்".
விளக்கம்
அல்லாஹ்வை விசுவாசித்து, நோன்பு கட்டாயக் கடமையென்பதையும், அதனை நோற்கும் நோன்பாளிகளுக்கு தயார்செய்து வைத்துள்ள கூலிகள் மற்றும் வெகுமதிகளையும் உண்மைப்படுத்தி அவனது வாக்குறுதியை உண்மைப்படுத்தி, அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி முகஸ்துதி இன்றி அல்லாஹ்வுக்காக நோன்பு நோற்றவரின் முன்சென்ற (சிறு)பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அறிவத்துள்ளார்கள்.
عن أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَسَحَّرُوا، فَإِنَّ فِي السَّحُورِ بَرَكَةً». நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : ஸஹ்ர் செய்யுங்கள். நிச்சயமாக ஸஹ்ர் செய்வதில் பறக்கத் (அபிவிருத்தி) இருக்கிறது.
விளக்கம்
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஸுஹுர் செய்வதை ஊக்குவித்தார்கள். ஸஹுர் என்பது இரவின் கடைசிப் பகுதியில் நோன்பு நோற்பதற்கு தயாராகும் நோக்குடன் உண்ணும் உணவாகும், அதிகமான நன்மை மற்றும் பரகத் (அபிவிருத்தி) கிடைக்கின்றமை, இரவின் கடைசிப் பகுதியில் தொழுது பிரார்த்திப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கின்றமை, நோன்பு நோற்பதற்கான வலிமையும்; அதற்கான புத்துணர்ச்சியும் கிடைக்கின்றமை, நோன்பின் கஷ்டத்தைக் குறைத்தல் போன்ற பல நன்மைகள் ஸஹர் செய்வதினால் கிடைக்கப் பெறுகின்றன. இதன் காரணமாக நபியவர்கள் ஸஹர் உணவை உண்ணுமாறு ஊக்குவித்துள்ளார்கள்.
عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدَ النَّاسِ، وَكَانَ أَجْوَدُ مَا يَكُونُ فِي رَمَضَانَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ، وَكَانَ يَلْقَاهُ فِي كُلِّ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ فَيُدَارِسُهُ القُرْآنَ، فَلَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدُ بِالخَيْرِ مِنَ الرِّيحِ المُرْسَلَةِ. இப்னுஅப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாக வாரி வழங்குபவர்களாகத் திகழ்ந்தார்கள். (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளான் மாதத்தில் தம்மைச் சந்திக்கின்ற வேளையில், நபியவர்கள் இன்னும் அதிகமாக வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளானின் ஒவ்வோர் இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, (அதுவரை அருளப்பெற்ற) குர்ஆனை ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு நினைவுபடுத்தி கற்றுக் கொடுப்பார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்ந்து வீசும் மழைக் காற்றை விட அதிகமாக நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள்.
விளக்கம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகவும் தாராள மனப்பான்மை கொண்டவர், மேலும் ரமளான் மாதத்தில் அவரது தாராள மனப்பான்மை இன்னும் அதிகமாக இருந்தது. அவர் வேண்டியவர்களுக்கு தாராளமாக கொடுப்பார். இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன: 1- ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை சந்தித்தமை. 2- குர்ஆனை மீட்டுவது, அதாவது அல் குர்ஆனை மனப்பாடத்தில் ஓதுவதை மறுபரீசீலனை செய்வது. அல்குர்ஆனில் அந்நேரம் வரை இறக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளையும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஓதியோடு அதனை நபியவர்களுடன் மறுபரிசீலனை செய்தார்கள். இந்த நேரத்தில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ் மழையுடனும் கருணையுடனும் அனுப்பும் இனிமையான காற்றை விட, மக்களுக்கு மிகவும் தாராளமாகவும், கனிவாகவும், வாரி வழங்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.
இதையும் பார்க்கவும்
பிற ஆண்டுகள்
பிற சிறப்பு நாட்கள்
இஸ்லாமிய புத்தாண்டு 2027ஆஷூரா 2027இஸ்ரா மிஃராஜ் 2027லைலத்துல் கத்ர் 2027நோன்புப் பெருநாள் 2027அரஃபா நாள் 2027ஹஜ்ஜுப் பெருநாள் 2027 இஸ்லாமிய நாட்காட்டி 1448 ஹிஜ்ரி
கேள்விகள்
ரமலான் 2027 எப்போது?
ரமலான் 2027 திங்கள், 8 பிப்ரவரி, 2027 அன்று தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது உம்முல் குரா நாட்காட்டியில் 1 ரமலான் 1448 ஹிஜ்ரி.
ரமலான் தேதி உறுதியானதா?
புதிய பிறை பார்க்கப்படும் வரை உறுதியில்லை. பல நாடுகள் மாதத் தொடக்கத்தை முந்தைய நாள் மாலையில் அறிவிக்கின்றன. அதனால் தேதி ஒரு நாள் மாறலாம்.
ரமலான் எத்தனை நாட்கள்?
ரமலானில் 29 அல்லது 30 நாட்கள் உள்ளன. ஷவ்வால் பிறை பார்க்கப்பட்டதும் அது முடிவடைகிறது, மறுநாள் நோன்புப் பெருநாள்.