ஸூரா Yunus, வசனம் 59

10:59

قُلۡ أَرَءَيۡتُم مَّآ أَنزَلَ ٱللَّهُ لَكُم مِّن رِّزۡقٖ فَجَعَلۡتُم مِّنۡهُ حَرَامٗا وَحَلَٰلٗا قُلۡ ءَآللَّهُ أَذِنَ لَكُمۡۖ أَمۡ عَلَى ٱللَّهِ تَفۡتَرُونَ ٥٩

59. (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘உங்களுக்காக அல்லாஹ் இறக்கி வைத்த உணவுகள் - அவற்றில் சிலவற்றை ஆகாதவை என்றும், சிலவற்றை ஆகுமானவை என்றும் (உங்கள் விருப்பப்படி) நீங்கள் ஆக்கிக் கொள்கிறீர்களே அதைப்பற்றி கூறுங்கள்!'' (‘‘இப்படி உங்கள் விருப்பப்படி செய்ய) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறானா? அல்லது அல்லாஹ்வின் மீது கற்பனையாக(ப் பொய்) கூறுகிறீர்களா?'' என்று (அவர்களைக்) கேட்பீராக!

தஃப்ஸீர்

10.59. -தூதரே!- இந்த இணைவைப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: “அல்லாஹ் வாழ்வாதாரங்களை இறக்கி உங்கள் மீது அருள் புரிந்ததைப் பற்றி எனக்குக் கூறுங்கள். அவற்றில் உங்களுடைய மனஇச்சைகளைக் கொண்டு சிலவற்றை தடைசெய்யப்பட்டதாகவும் சிலவற்றை அனுமதிக்கப்பட்டதாகவும் ஆக்கிவிட்டீர்கள்.” நீர் அவர்களிடம் கேட்பீராக: நீங்கள் நினைத்ததைத் தடைசெய்யும் அதிகாரத்தையும் அனுமதியளிக்கும் அதிகாரத்தையும் அல்லாஹ்தான் உங்களுக்கு அளித்தானா? அல்லது நீங்களாகவே அவன் மீது பொய்யாக புனைந்து கொண்டீர்களா?