Laqad kana lakum fi rasulillah

மொழிபெயர்ப்பு: Tamil Translation - Abdulhamid Baqawi

لَّقَدۡ كَانَ لَكُمۡ فِي رَسُولِ ٱللَّهِ أُسۡوَةٌ حَسَنَةٞ لِّمَن كَانَ يَرۡجُواْ ٱللَّهَ وَٱلۡيَوۡمَ ٱلۡأٓخِرَ وَذَكَرَ ٱللَّهَ كَثِيرٗا ٢١

21. எவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உறுதியாக நம்புகிறார்களோ, அவர்கள் பின்பற்றி நடக்கவேண்டிய அழகான உதாரணம் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடமே இருக்கிறது. அவர்கள் (அவரைப் பின்பற்றி நடந்து) அல்லாஹ்வை அதிகமாக நினைவு செய்து கொண்டிருப்பார்கள்.

தஃப்ஸீர்

33.21. அல்லாஹ்வின் தூதர் சொன்ன, செய்த அனைத்திலும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கின்றது. அவர் போரில் நேரிடையாக பங்கு பெற்றுள்ளார். அதன் பின்னரும் நீங்கள் அவரது உயிரைவிட உங்களின் உயிர்களை பெரிதாக எண்ணுகிறீர்களா? அல்லாஹ் வழங்கும் கூலியிலும் அவனது அருளிலும் மறுமையின் மீதும் ஆதரவு வைத்து அதற்காக செயல்பட்டு அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவு கூறக்கூடியவர்கள்தாம் அல்லாஹ்வின் தூதரை முன்மாதிரியாக ஏற்றுக் கொள்கிறார்கள். மறுமையை நம்பாமல், அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூறாமல் இருப்பவர்கள் அல்லாஹ்வின் தூதரை முன்மாதிரியாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

ஸூரா Al-Ahzab முழுவதையும் ஓதுங்கள்

கேள்விகள்

Laqad kana lakum fi rasulillah குர்ஆனில் எங்கே உள்ளது?

Laqad kana lakum fi rasulillah ஸூரா Al-Ahzab, 33:21 இல் உள்ளது.