فَٱصۡبِرۡ إِنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞ وَٱسۡتَغۡفِرۡ لِذَنۢبِكَ وَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ بِٱلۡعَشِيِّ وَٱلۡإِبۡكَٰرِ ٥٥
55. (நபியே!) நீர் (கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டு பொறுமையாக இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது. நீர் உமது தவறுகளுக்கு மன்னிப்பைக் கோரிக்கொண்டும், காலையிலும், மாலையிலும் உமது இறைவனைப் புகழ்ந்து துதி செய்து கொண்டும் இருப்பீராக!
தஃப்ஸீர்
40.55. -தூதரே!- உம் சமூகத்தினர் உம்மை பொய்ப்பிப்பதையும் அவர்களால் நீர் சந்திக்கும் துன்பங்களையும் பொறுமையுடன் சகித்துக் கொள்வீராக. நிச்சயமாக உமக்கு உதவிசெய்வதாக, வலுப்படுத்துவதாக அல்லாஹ் அளித்த வாக்குறுதி சந்தேகமற்ற உண்மையாகும். உம்முடைய பாவத்திற்காக மன்னிப்புக் கோருவீராக. காலையிலும் மாலையிலும் உம் இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக.