۞ أَوَلَمۡ يَسِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَيَنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ كَانُواْ مِن قَبۡلِهِمۡۚ كَانُواْ هُمۡ أَشَدَّ مِنۡهُمۡ قُوَّةٗ وَءَاثَارٗا فِي ٱلۡأَرۡضِ فَأَخَذَهُمُ ٱللَّهُ بِذُنُوبِهِمۡ وَمَا كَانَ لَهُم مِّنَ ٱللَّهِ مِن وَاقٖ ٢١
21. (நபியே!) இவர்கள் பூமியில் சுற்றித் திரியவில்லையா? (திரிந்திருந்தால்) இவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எவ்வாறு ஆயிற்று என்பதைக் கண்டுகொள்வார்கள். (முன்னிருந்த) அவர்களோ, பலத்தாலும், பூமியில் விட்டுச் சென்ற (பூர்வ) சின்னங்களாலும் இவர்களைவிட மிகைத்தவர்களாகவே இருந்தனர். (எனினும்,) அவர்களின் பாவங்களின் காரணமாக அவர்களை அல்லாஹ் பிடித்துக் கொண்டான். அல்லாஹ்வின் பிடியிலிருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்ள ஒருவரும் இருக்கவில்லை.
தஃப்ஸீர்
40.21. இந்த இணைவைப்பாளர்கள் பூமியில் பயணம் செய்து தங்களுக்கு முன்னர் நிராகரித்தவர்களின் இறுதி முடிவு என்னவாயிற்று என்பதை பார்க்க வேண்டாமா? அவர்களின் முடிவு மோசமானதாக இருந்தது. அந்த சமூகங்கள் இவர்களைவிட பலம்மிக்கவையாகவும் பூமியில் கட்டடங்களைக்கொண்டு அடையாளங்களை விட்டுச் சென்றவையாகவும் இருந்தன. இவர்களோ எந்த ஒன்றையும் விட்டுச் செல்லவில்லை. அவர்களின் பாவங்களினால் அல்லாஹ் அவர்களை அழித்துவிட்டான். அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து அவர்களை தடுக்கும் எவரும் இருக்கவில்லை.