هُوَ ٱلَّذِي يُرِيكُمۡ ءَايَٰتِهِۦ وَيُنَزِّلُ لَكُم مِّنَ ٱلسَّمَآءِ رِزۡقٗاۚ وَمَا يَتَذَكَّرُ إِلَّا مَن يُنِيبُ ١٣
13. அவன் தனது அத்தாட்சிகளை உங்களுக்கு அறிவித்து, வானத்தில் இருந்து உங்களுக்கு உணவுகளையும் இறக்கிவைக்கிறான். (ஒவ்வொரு விஷயத்திலும்) அவனையே முன்நோக்குபவர்களைத் தவிர, மற்றெவரும் (இதைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெற மாட்டார்கள்.
தஃப்ஸீர்
40.13. அல்லாஹ்வே உங்களுக்கு பிரபஞ்சத்திலும் உங்களிலும் தன் வல்லமையையும் தான் ஒருவனே என்பதையும் அறிவிக்கக்கூடிய தன் சான்றுகளைக் காட்டுகிறான். உங்களுக்கு வாழ்வாதாரமாக அமையும் தாவரங்கள், பயிர்கள் மற்றும் இன்னபிறவற்றுக்குக் காரணமான மழை நீரை அவனே வானத்திலிருந்து இறக்குகின்றான். அல்லாஹ்வின் சான்றுகளைக்கொண்டு தூய மனதுடன் அவன் பக்கம் திரும்புபவர்தான் அறிவுரை பெறுவார்.