ஸூரா At-Tawbah, வசனம் 7

9:7

كَيۡفَ يَكُونُ لِلۡمُشۡرِكِينَ عَهۡدٌ عِندَ ٱللَّهِ وَعِندَ رَسُولِهِۦٓ إِلَّا ٱلَّذِينَ عَٰهَدتُّمۡ عِندَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِۖ فَمَا ٱسۡتَقَٰمُواْ لَكُمۡ فَٱسۡتَقِيمُواْ لَهُمۡۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُتَّقِينَ ٧

7. அல்லாஹ்விடத்திலும், அவனுடைய தூதரிடத்திலும் இணைவைத்து வணங்குபவர்களின் உடன்படிக்கைக்கு எவ்வாறு மதிப்பிருக்க முடியும்? ஆயினும், சிறப்புற்ற மஸ்ஜிதின் முன் உங்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டவர்கள் (தங்கள் உடன்படிக்கையின்படி) உங்களுடன் உறுதியாக இருக்கும் வரை, நீங்களும் அவர்களுடன் உறுதியாகவே இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் இறையச்சமுடையவர்களை நேசிக்கிறான்.

தஃப்ஸீர்

9.7. அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் இணைவைப்பாளர்களுக்கு ஒப்பந்தமோ பாதுகாப்போ இருக்க முடியாது. ஆயினும் மஸ்ஜிதுல் ஹராம் எல்லையில் வைத்து - முஸ்லிம்களே! - உங்களுடன் ஹுதைபிய்யா ஒப்பந்தம் செய்து கொண்டவர்களைத் தவிர. உங்களுக்கும் அவர்களுக்குமிடையிலுள்ள ஒப்பந்தத்தை மீறாமல் அவர்கள் நேர்மையாக இருக்கும் வரை நீங்களும் நேர்மையாக இருங்கள். அதனை மீறி விடாதீர்கள். தன் அடியார்களில் தன் கட்டளைகளைச் செயல்படுத்தி தான் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி தன்னை அஞ்சுவோரை அல்லாஹ் நேசிக்கிறான்.