ஸூரா At-Tawbah, வசனம் 120

9:120

مَا كَانَ لِأَهۡلِ ٱلۡمَدِينَةِ وَمَنۡ حَوۡلَهُم مِّنَ ٱلۡأَعۡرَابِ أَن يَتَخَلَّفُواْ عَن رَّسُولِ ٱللَّهِ وَلَا يَرۡغَبُواْ بِأَنفُسِهِمۡ عَن نَّفۡسِهِۦۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ لَا يُصِيبُهُمۡ ظَمَأٞ وَلَا نَصَبٞ وَلَا مَخۡمَصَةٞ فِي سَبِيلِ ٱللَّهِ وَلَا يَطَـُٔونَ مَوۡطِئٗا يَغِيظُ ٱلۡكُفَّارَ وَلَا يَنَالُونَ مِنۡ عَدُوّٖ نَّيۡلًا إِلَّا كُتِبَ لَهُم بِهِۦ عَمَلٞ صَٰلِحٌۚ إِنَّ ٱللَّهَ لَا يُضِيعُ أَجۡرَ ٱلۡمُحۡسِنِينَ ١٢٠

120. மதீனாவாசிகள் இன்னும் அவர்களைச் சூழ்ந்து வசிக்கும் கிராமத்து அரபிகள் ஆகிய இவர்கள் அல்லாஹ்வுடைய தூதரை விட்டுப் (பிரிந்து) பின் தங்குவதும்; (அல்லாஹ்வுடைய) தூதரின் உயிரைவிட தங்கள் உயிரையே பெரிதாகக் கருதுவதும் தகுமானதல்ல. ஏனென்றால், அல்லாஹ்வுடைய பாதையில் இவர்களுக்கு ஏற்படும் தாகம், கலைப்பு, பசி (ஆகியவையும்), நிராகரிப்பவர்களைக் கோபமூட்டும்படியான இடத்தில் கால் வைத்து, அதனால் எதிரியிடமிருந்து ஒரு துன்பத்தை அடைதல் ஆகிய இவையனைத்தும் அவர்களுக்கு நன்மைகளாகவே பதிவு செய்யப்படுகின்றன. நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) நன்மை செய்பவர்களின் (அழகிய பண்பாளர்களின்) கூலியை வீணாக்கி விடுவதில்லை.

தஃப்ஸீர்

9.120. மதீனாவாசிகளுக்கும் அவர்களைச் சுற்றியுள்ள நாட்டுப்புறவாசிகளுக்கும் அல்லாஹ்வின் தூதர் போருக்காகப் புறப்பட்டால் அவரை விட்டுப் பின்தங்குவதோ அவரின் உயிரைவிட தங்களின் உயிரை பெரிதாக எண்ணுவதோ உகந்ததல்ல. மாறாக அவர்கள் தூதருக்காக தம் உயிரை அர்ப்பணிக்க வேண்டும். ஏனெனில் அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்படும் தாகம், களைப்பு, பசி மற்றும் நிராகரிப்பாளர்களை ஆத்திரமூட்டுவதற்காக அவர்களின் ஊர்களில் அவர்கள் எடுத்துவைக்கும் காலடிகள், எதிரிகளைக் கொல்லுதல், கைதிகளாகப் பிடித்தல், போர்ச் செல்வங்களையோ தோல்வியையோ பெறுதல் என ஒவ்வொன்றுக்கும் பகரமாக அவர்களுக்கு நன்மை எழுதப்படுகிறது. நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரின் கூலியை வீணாக்கிவிடுவதில்லை. மாறாக அவன் அவர்களுக்கு அதனை முழுமையாகவும் இன்னும் அதிகமாகவும் வழங்கிவிடுகிறான்.