ஸூரா Ar-Rum, வசனம் 11

30:11

ٱللَّهُ يَبۡدَؤُاْ ٱلۡخَلۡقَ ثُمَّ يُعِيدُهُۥ ثُمَّ إِلَيۡهِ تُرۡجَعُونَ ١١

11. (மனிதர்களே!) அல்லாஹ்வே படைப்புகளை முதலாவதாக உற்பத்தி செய்கிறான். அவனே (அவை இறந்த பின்னரும்) அவற்றை மீளவைப்பான். பின்னர், (மனிதர்களே!) நீங்கள் அனைவரும் அவனிடமே கொண்டு வரப்படுவீர்கள்.

தஃப்ஸீர்

30.11. அல்லாஹ் படைப்பை முன்மாதிரியின்றி தொடங்குகிறான். பின்னர் அதனை மரணிக்கச் செய்கிறான். பின்னர் அதனை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புகிறான். பின்னர் மறுமை நாளில் விசாரணைக்காகவும் கூலி பெறுவதற்காகவும் அவன் பக்கம் மட்டுமே திரும்ப வேண்டும்.