يَٰمَعۡشَرَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِ إِنِ ٱسۡتَطَعۡتُمۡ أَن تَنفُذُواْ مِنۡ أَقۡطَارِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ فَٱنفُذُواْۚ لَا تَنفُذُونَ إِلَّا بِسُلۡطَٰنٖ ٣٣
33. மனித, ஜின் கூட்டத்தார்களே! நீங்கள் வானங்கள் இன்னும் பூமியின் எல்லையைக் கடந்து சென்றுவிட உங்களால் கூடுமாயின் அவ்வாறு சென்று விடுங்கள். ஆயினும், (அவற்றை ஆட்சி புரியக்கூடிய) மிகப் பெரும் பலத்தைக் கொண்டே தவிர நீங்கள் செல்ல முடியாது.
தஃப்ஸீர்
55.33. அல்லாஹ் மறுமை நாளில் மனிதர்களையும் ஜின்களையும் ஒன்றுதிரட்டும்போது கூறுவான்: “மனித, ஜின் சமூகமே! வானங்கள் மற்றும் பூமியின் ஓரங்களிலிருந்து உங்களால் வெளியேற முடிந்தால் வெளியேருங்கள். ஆதாரமும் பலமும் இன்றி உங்களால் ஒருபோதும் வெளியேற முடியாது. நிச்சயமாக அது உங்களுக்கு எவ்வாறு முடியும்?