وَٱلَّذِينَ كَفَرُواْ وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَآ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡجَحِيمِ ٨٦
86. எவர்கள் (நம் தூதரை) நிராகரித்து, நம் வசனங்களையும் பொய்யாக்குகின்றனரோ அவர்கள் நரகவாசிகளே!
தஃப்ஸீர்
5.86. அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்து அவன் தன் தூதர்மீது இறக்கிய வசனங்களை பொய்யெனக் கூறியவர்கள்தாம் நரகவாசிகள். அவர்களே எரியும் நெருப்பிற்கு உரியவர்கள். அங்கிருந்து ஒருபோதும் அவர்களால் வெளியேறவே முடியாது.