لَوۡلَا يَنۡهَىٰهُمُ ٱلرَّبَّٰنِيُّونَ وَٱلۡأَحۡبَارُ عَن قَوۡلِهِمُ ٱلۡإِثۡمَ وَأَكۡلِهِمُ ٱلسُّحۡتَۚ لَبِئۡسَ مَا كَانُواْ يَصۡنَعُونَ ٦٣
63. அவர்கள் (பொய் சொல்லி) பாவமான வார்த்தைகள் கூறுவதையும், விலக்கப்பட்டவற்றை விழுங்குவதையும், அவர்களுடைய (பண்டிதர்களாகிய) ரிப்பியூன்களேனும் அவர்களுடைய (பாதிரிகளாகிய) அஹ்பார்களேனும் தடை செய்ய வேண்டாமா? இவர்களுடைய செயலும் மிகக் கெட்டதுவே.
தஃப்ஸீர்
5.63. அவர்களின் தலைவர்களும், அறிஞர்களும், பொய், பொய்சாட்சி, மக்களின் செல்வங்களை தவறான முறையில் உண்ணுதல் ஆகிய அவர்கள் மும்முரமாகச் செய்யும் பாவங்களை விட்டும், அவர்களைத் தடுக்க வேண்டாமா? அவர்களின் தலைவர்களும், அறிஞர்களும் தீமைகளைத் தடுக்காமல் செய்துகொண்டிருப்பது மிகவும் மோசமான காரியமாகும்.