ஸூரா Al-Ma'idah, வசனம் 16

5:16

يَهۡدِي بِهِ ٱللَّهُ مَنِ ٱتَّبَعَ رِضۡوَٰنَهُۥ سُبُلَ ٱلسَّلَٰمِ وَيُخۡرِجُهُم مِّنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِ بِإِذۡنِهِۦ وَيَهۡدِيهِمۡ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ ١٦

16. (உங்களில்) எவர்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பின்பற்றுகிறார்களோ அவர்களை அதன் மூலமாக அல்லாஹ் சமாதானத்திற்குரிய வழியில் செலுத்துகிறான். இன்னும், இருள்களில் இருந்தும் வெளியேற்றித் தன் அருளைக் கொண்டு ஒளியின் பக்கம் கொண்டு வருகிறான். மேலும், அவர்களை நேரான வழியில் செல்லும்படியும் செய்கிறான்.

தஃப்ஸீர்

5.16. அல்லாஹ் இந்த வேதத்தின் மூலம் தனக்கு விருப்பமான ஈமான் மற்றும் நற்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தனது வேதனையிலிருந்து ஈடேற்றம் பெறும் வழிகளைக் காட்டுகிறான். அது சுவனத்தின்பால் கொண்டு சேர்க்கக்கூடிய வழிகளாகும். நிராகரிப்பு, தீமை ஆகிய இருள்களிலிருந்து அவர்களை வெளியேற்றி அவனை நம்புதல், அவனுக்குக் கீழ்படிதல் ஆகிய ஒளியின் பக்கம் செல்வதற்கு அனுமதிக்கிறான். மேலும் இஸ்லாம் என்னும் நேரான பாதையின் பக்கம் அவர்களுக்கு வழிகாட்டுகிறான்.