فَمَن تَوَلَّىٰ بَعۡدَ ذَٰلِكَ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡفَٰسِقُونَ ٨٢
82. இதற்குப் பின்னரும் எவரேனும் புறக்கணித்தால் அவர்கள்தான் பெரும் பாவிகள் ஆவர்.
தஃப்ஸீர்
3.82. அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதர்களின் சாட்சியம் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் பின்னரும் புறக்கணிப்பவர்கள்தாம் அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டும் அவனுக்கு அடிபணிவதை விட்டும் வெளியேறியவர்கள்.