يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تُقَدِّمُواْ بَيۡنَ يَدَيِ ٱللَّهِ وَرَسُولِهِۦۖ وَٱتَّقُواْ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٞ ١
1. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் முன்பாக(ப் பேசுவதற்கு) நீங்கள் முந்திக்கொள்ளாதீர்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.
தஃப்ஸீர்
49.1. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவன் விதித்தவற்றைப் பின்பற்றியவர்களே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முன்னால் சொல்லாலோ, செயலாலோ முந்தாதீர்கள். அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் பேசுவதை செவியேற்கக்கூடியவன். உங்களின் செயல்களை நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனை விட்டும் தவறாது. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.