ஸூரா Al-Baqarah, வசனம் 78

2:78

وَمِنۡهُمۡ أُمِّيُّونَ لَا يَعۡلَمُونَ ٱلۡكِتَٰبَ إِلَّآ أَمَانِيَّ وَإِنۡ هُمۡ إِلَّا يَظُنُّونَ ٧٨

78. மேலும், கல்வி அறிவு இல்லாதவர்களும் அவர்களில் உண்டு. வேதத்தைப் பற்றி (கேள்விப்பட்டுள்ள) வீண் நம்பிக்கைகளைத் தவிர (உண்மையை) அவர்கள் அறியவே மாட்டார்கள். அவர்கள் வீண் சந்தேகத்தில் (ஆழ்ந்து) கிடப்பவர்களைத் தவிர (வேறு) இல்லை.

தஃப்ஸீர்

2.78. தவ்ராத்தை வாசிக்க மாத்திரமே தெரிந்த ஒரு பிரிவினரும் யூதா்களில் உள்ளனர். அதில் கூறப்பட்டுள்ள எதையும் அவர்கள் அறிய மாட்டார்கள். அவர்களின் பெரியோர்களிடமிருந்து பெற்ற பொய்களைத்தான் அல்லாஹ் இறக்கிய தவ்ராத் என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.