ஸூரா Al-Baqarah, வசனம் 271

2:271

إِن تُبۡدُواْ ٱلصَّدَقَٰتِ فَنِعِمَّا هِيَۖ وَإِن تُخۡفُوهَا وَتُؤۡتُوهَا ٱلۡفُقَرَآءَ فَهُوَ خَيۡرٞ لَّكُمۡۚ وَيُكَفِّرُ عَنكُم مِّن سَيِّـَٔاتِكُمۡۗ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ ٢٧١

271. (நீங்கள் செய்யும்) தர்மங்களை நீங்கள் வெளிப்படையாக செய்தால் அதுவும் நன்றே. (ஏனெனில், அது பிறரையும் தர்மம் செய்யும்படி தூண்டும்.) ஆயினும், அதை நீங்கள் மறைத்தே கொடுப்பது, அதுவும் அதை ஏழைகளுக்குக் கொடுப்பது உங்களுக்கு மிகவும் நன்மை (பயக்கும்). மேலும், அது (அதாவது இருவகை தர்மமும்) உங்கள் பாவங்களுக்குப் பரிகாரமாகவும் ஆகும். நீங்கள் செய்யும் (வெளிப்படையான மற்றும்) மறைவான அனைத்தையும் அல்லாஹ் நன்கறிவான்.

தஃப்ஸீர்

2.271. நீங்கள் செய்யும் தர்மங்களை வெளிப்படுத்தினால் அதுவும் நல்லதுதான். நீங்கள் அவற்றை மறைமுகமாக ஏழைகளுக்கு வழங்கினால் அது வெளிப்படையாகச் செய்வதைக் காட்டிலும் சிறந்ததாகும். அதுதான் உளத்தூய்மைக்கு மிகவும் நெருக்கமானது. உளத்தூய்மையுடன் செய்யப்படும் தர்மங்கள் பாவங்களுக்குத் திரையாகவும் மன்னிப்பாகவும் அமைந்துவிடுகின்றன. அவன் நீங்கள் செய்யக்கூடியவற்றை நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை.