مَّن ذَا ٱلَّذِي يُقۡرِضُ ٱللَّهَ قَرۡضًا حَسَنٗا فَيُضَٰعِفَهُۥ لَهُۥٓ أَضۡعَافٗا كَثِيرَةٗۚ وَٱللَّهُ يَقۡبِضُ وَيَبۡصُۜطُ وَإِلَيۡهِ تُرۡجَعُونَ ٢٤٥
245. (சிரமத்தில் இருப்பவர்களுக்கு தர்மம் கொடுப்பதன் மூலம்) அழகான முறையில் அல்லாஹ்விற்கு கடன் கொடுப்பவர் யார்? அதை அவன் அவர்களுக்கு பன்மடங்கு அதிகரிக்கும்படிச் செய்வான். அல்லாஹ் (பொருளை சிலருக்குச்) சுருக்கியும் கொடுப்பான். (சிலருக்குப்) பெருக்கியும் கொடுப்பான். இன்னும், அவனிடமே நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள்.
தஃப்ஸீர்
2.245. தன் செல்வத்தை நல்லெண்ணத்துடனும், தூய உள்ளத்துடனும் அல்லாஹ்வின் பாதையில் செலவுசெய்து கடனளிப்பவரின் செயலைச் செய்பவர் யார்? அல்லாஹ் அவருக்குப் பன்மடங்காக்கித் தருவான். வாழ்வாதாரத்திலும் ஆரோக்கியத்திலும், இன்னபிற விஷயங்களிலும் அல்லாஹ்வே நெருக்கடியையும் விசாலத்தையும் ஏற்படுத்துகிறான். மறுமையில் அவன் பக்கமே நீங்கள் திரும்ப வேண்டும். அவன் உங்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்கிடுவான்.