ஸூரா Al-Baqarah, வசனம் 2

2:2

ذَٰلِكَ ٱلۡكِتَٰبُ لَا رَيۡبَۛ فِيهِۛ هُدٗى لِّلۡمُتَّقِينَ ٢

2. இதுதான் வேதநூல். இதில் சந்தேகமேயில்லை. இறையச்சம் உடையவர்களுக்கு (இது) நேரான வழியைக் காட்டும்.

தஃப்ஸீர்

2.2. மகத்துவமிக்க இந்தக் குர்ஆன் இது இறங்கிய மூலத்தின் அடிப்படையிலும், உச்சரிப்பு மற்றும் பொருளின் அடிப்படையிலும் அல்லாஹ்வின் வார்த்தைதான் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. தனக்குப் பயப்படக்கூடியவர்களுக்கு அவன் தன் பக்கம் வரக்கூடிய வழியைக் காட்டுகிறான்.