وَلَا تَأۡكُلُوٓاْ أَمۡوَٰلَكُم بَيۡنَكُم بِٱلۡبَٰطِلِ وَتُدۡلُواْ بِهَآ إِلَى ٱلۡحُكَّامِ لِتَأۡكُلُواْ فَرِيقٗا مِّنۡ أَمۡوَٰلِ ٱلنَّاسِ بِٱلۡإِثۡمِ وَأَنتُمۡ تَعۡلَمُونَ ١٨٨
188. (மேலும்,) உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். (உங்கள் வாதம் பொய்யானதென) நீங்கள் அறிந்திருந்தும் (இதர) மனிதர்களின் பொருள்களில் எதையும் பாவமான வழியில் (அநியாயமாக லஞ்சம் கொடுத்து) அபகரித்துக்கொள்ள அதிகாரிகளிடம் செல்லாதீர்கள்.
தஃப்ஸீர்
2.188. திருட்டு, கொள்ளை, மோசடி போன்ற சட்டத்திற்குப் புறம்பான வழியில் நீங்கள் ஒருவர் மற்றவரின் செல்வத்தைப் பெறாதீர்கள். மக்களின் செல்வத்தை பாவமான முறையில் பிடுங்குவதற்காக அதிகாரிகளிடம் வாதாடாதீர்கள். இவையனைத்தையும் அல்லாஹ் தடைசெய்துள்ளான் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். தடைசெய்யப்பட்டது என அறிந்துகொண்டே பாவத்தில் ஈடுபடுவது மிகக் கேவலமானதும் பெரும் தண்டனைக்குரிய செயலுமாகும்.