ஸூரா Al-Baqarah, வசனம் 186

2:186

وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌۖ أُجِيبُ دَعۡوَةَ ٱلدَّاعِ إِذَا دَعَانِۖ فَلۡيَسۡتَجِيبُواْ لِي وَلۡيُؤۡمِنُواْ بِي لَعَلَّهُمۡ يَرۡشُدُونَ ١٨٦

186. (நபியே!) உம்மிடம் என் அடியார்கள் என்னைப் பற்றிக் கேட்டால் (அதற்கு நீர் கூறுவீராக:) ‘‘நிச்சயமாக நான் உங்களுக்கு சமீபமானவன். (எவரும்) என்னை அழைத்தால் அந்த அழைப்பாளரின் அழைப்புக்கு விடையளிப்பேன்.'' ஆதலால், அவர்கள் என்னிடமே பிரார்த்தனை செய்யவும்; என்னையே நம்பிக்கை கொள்ளவும். (அதனால்) அவர்கள் நேர்வழி அடைவார்கள்.

தஃப்ஸீர்

2.186. தூதரே! என் அடியார்கள் என்னை நெருங்குவது குறித்தும், நான் அவர்களின் பிரார்த்தனைக்கு பதிலளிப்பது குறித்தும் உம்மிடம் வினவினால் - நான் அவர்களுக்குச் சமீபமாக, அவர்களின் நிலையை நன்கறிந்தவனாக, அவர்களின் பிரார்த்தனையை செவியேற்பவனாக இருக்கின்றேன். அவர்களுக்கு இடைத்தரகர்கள் தேவையில்லை; அவர்கள் சப்தத்தை உயர்த்த வேண்டிய அவசியமும் இல்லை. அழைப்பவரின் அழைப்புக்கு, அவர் என்னை உளத்தூய்மையுடன் அழைக்கும்போது நான் பதிலளிக்கிறேன். எனவே அவர்கள் என்னுடைய கட்டளைகளுக்குக் கட்டுப்படட்டும்; தங்களுடைய நம்பிக்கையில் உறுதியாக இருக்கட்டும். இதுதான் நான் அவர்களுக்குப் பதிலளிப்பதற்கான பயனுள்ள வழிமுறை. இதனால் அவர்கள் தங்களின் உலக மற்றும் மார்க்க விவகாரங்களில் நேரான பாதையில் சென்றிடலாம்.