ஸூரா Al-A'raf, வசனம் 47

7:47

۞ وَإِذَا صُرِفَتۡ أَبۡصَٰرُهُمۡ تِلۡقَآءَ أَصۡحَٰبِ ٱلنَّارِ قَالُواْ رَبَّنَا لَا تَجۡعَلۡنَا مَعَ ٱلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ ٤٧

47. இவர்களின் பார்வை நரகவாசிகளின் பக்கம் திருப்பப்பட்டால் (அவர்கள் படும் வேதனையைக் கண்டு திடுக்கிட்டு) ‘‘எங்கள் இறைவனே! (இந்த) அநியாயக்கார மக்களுடன் (நரகத்தில்) எங்களையும் சேர்த்துவிடாதே!'' என்று (பிரார்த்தித்துக்) கூறுவார்கள்.

தஃப்ஸீர்

7.47. அஃராப்வாசிகளின் பார்வைகள் நரகவாசிகளின் பக்கம் திருப்பப்பட்டால் அவர்கள் அனுபவிக்கும் கடுமையான வேதனையைப் பார்த்து, “எங்கள் இறைவா! நிராகரித்து, இணைவைத்த இந்த அநியாயக்கார மக்களுடன் எங்களை ஆக்கிவிடாதே” என்று பிரார்த்தனை செய்வார்கள்.