ஸூரா Al-A'raf, வசனம் 167

7:167

وَإِذۡ تَأَذَّنَ رَبُّكَ لَيَبۡعَثَنَّ عَلَيۡهِمۡ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ مَن يَسُومُهُمۡ سُوٓءَ ٱلۡعَذَابِۗ إِنَّ رَبَّكَ لَسَرِيعُ ٱلۡعِقَابِ وَإِنَّهُۥ لَغَفُورٞ رَّحِيمٞ ١٦٧

167. (நபியே!) அவர்களுக்குக் கொடிய நோவினை செய்யக்கூடியவர்களையே அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும்படி இறுதிநாள் வரை நாம் செய்து வருவோம் என்று உமது இறைவன் அவர்களுக்கு அறிக்கை இட்டதை (நீங்கள் அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக. நிச்சயமாக உமது இறைவன் வேதனை செய்வதில் மிகத் தீவிரமானவன். மேலும், நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவன், மகா கருணையாளன் ஆவான்.

தஃப்ஸீர்

7.167. தூதரே! மறுமை நாள் வரை இந்த உலக வாழ்வில் யூதர்களை இழிவுபடுத்துவோரை அவர்கள் மீது சாட்டிக்கொண்டே இருப்போம் என்ற சந்தேகமற்ற தெளிவான அல்லாஹ்வின் பிரகடனத்தை நினைவுகூர்வீராக. தூதரே! உம் இறைவன் தன் கட்டளைக்கு மாறாகச் செயல்படக்கூடியவர்களை கடுமையாக தண்டிக்கக்கூடியவன். சில வேளை இவ்வுலகிலேயே அவர்களுக்குத் தண்டனை அளித்துவிடுகிறான். ஆயினும் அவன் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.