ஸூரா Al-A'raf, வசனம் 161

7:161

وَإِذۡ قِيلَ لَهُمُ ٱسۡكُنُواْ هَٰذِهِ ٱلۡقَرۡيَةَ وَكُلُواْ مِنۡهَا حَيۡثُ شِئۡتُمۡ وَقُولُواْ حِطَّةٞ وَٱدۡخُلُواْ ٱلۡبَابَ سُجَّدٗا نَّغۡفِرۡ لَكُمۡ خَطِيٓـَٰٔتِكُمۡۚ سَنَزِيدُ ٱلۡمُحۡسِنِينَ ١٦١

161. (மேலும், அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் இவ்வூரில் வசித்திருங்கள். இதில் நீங்கள் விரும்பிய இடத்திலெல்லாம் (விரும்பிய பொருள்களைப்) புசித்துக் கொள்ளுங்கள். அன்றி ‘ஹித்ததுன்' (எங்கள் பாவச்சுமையை அகற்றுவாயாக!) என்று கூறிக்கொண்டே தலை குனிந்தவர்களாக அதன் வாயிலில் நுழையுங்கள். நாம் உங்கள் குற்றங்களை மன்னித்துவிடுவோம். நன்மை செய்பவர்களுக்கு மேலும், அதிகமாகவே நாம் (நற்)கூலி கொடுப்போம் என்று அவர்களுக்குக் கூறப்பட்டதற்கு,

தஃப்ஸீர்

7.161. தூதரே! அல்லாஹ் இஸ்ராயீலின் மக்களிடம் கூறியதை நினைவுகூர்வீராக: “நீங்கள் பைத்துல் முகத்தஸில் நுழையுங்கள். அந்த ஊரின் விளைச்சல்களில் எந்த இடத்திலிருந்து, எந்த நேரத்தில் விரும்பினாலும் உண்ணுங்கள். “எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னித்து விடுவாயாக” என்று கூறுங்கள். உங்கள் இறைவனுக்கு அடிபணிந்தவர்களாக வாயிலில் நுழையுங்கள். நீங்கள் அவ்வாறு செய்தால் நாம் உங்கள் பாவங்களை மன்னிப்போம். நன்மை செய்வோருக்கு இவ்வுலக மறுவுலக நன்மைகளை அதிகரித்து வழங்குவோம்.