ஸூரா Al-Anfal, வசனம் 25

8:25

وَٱتَّقُواْ فِتۡنَةٗ لَّا تُصِيبَنَّ ٱلَّذِينَ ظَلَمُواْ مِنكُمۡ خَآصَّةٗۖ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ ٢٥

25. நீங்கள் ஒரு வேதனையை பயந்துகொள்ளுங்கள். அது உங்களில் அநியாயக் காரர்களை மட்டுமே பிடிக்குமென்பதல்ல; (முடிவில் அது உங்களையும் சூழ்ந்து கொள்ளலாம்.) நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் கடுமையானவன் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.

தஃப்ஸீர்

8.25. -நம்பிக்கையாளர்களே!- வேதனையைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். அது உங்களில் பாவிகளை மட்டும் தாக்காது. அநியாயம் மிகைத்து அது தடுக்கப்படவில்லையெனில் மற்றவர்களையும் தாக்கும். தன் கட்டளைக்கு மாறாகச் செயல்படக்கூடியவர்களை அவன் கடுமையாக தண்டிக்கக்கூடியவன் என்பதை உறுதியாக அறிந்துகொள்ளுங்கள். பாவங்களிலிருந்து எச்சரிக்கையாக இருங்கள்.