إِن تَسۡتَفۡتِحُواْ فَقَدۡ جَآءَكُمُ ٱلۡفَتۡحُۖ وَإِن تَنتَهُواْ فَهُوَ خَيۡرٞ لَّكُمۡۖ وَإِن تَعُودُواْ نَعُدۡ وَلَن تُغۡنِيَ عَنكُمۡ فِئَتُكُمۡ شَيۡـٔٗا وَلَوۡ كَثُرَتۡ وَأَنَّ ٱللَّهَ مَعَ ٱلۡمُؤۡمِنِينَ ١٩
19. (நிராகரிப்பாளர்களே!) நீங்கள் வெற்றியின் மூலம் (முடிவான) தீர்ப்பைத் தேடிக் கொண்டிருந்தீர்கள். நிச்சயமாக அந்த வெற்றி உங்கள் முன் வந்துவிட்டது. (எனினும் அது உங்களுக்கல்ல; நம்பிக்கையாளர்களாகிய எங்களுக்கே! நாங்கள்தான் உங்களை வெற்றி கொண்டோம். ஆகவே, விஷமம் செய்வதிலிருந்து) இனியேனும் நீங்கள் விலகிக்கொண்டால் அது உங்களுக்கே நன்று. இனியும் நீங்கள் (விஷமம் செய்ய) முன் வரும்பட்சத்தில் நாமும் முன் வருவோம். உங்கள் கூட்டம் எவ்வளவு பெரிதாக இருந்த போதிலும் (அது) உங்களுக்கு ஒரு பலனையுமளிக்காது. ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களுடன் இருக்கிறான்.
தஃப்ஸீர்
8.19. -இணைவைப்பாளர்களே!- அல்லாஹ் வரம்புமீறிய அநியாயக்காரர்கள் மீது தன் வேதனையை இறக்கட்டும் என்று நீங்கள் பிரார்த்தனை செய்தால், நீங்கள் பிரார்த்தித்தவாறே அல்லாஹ் உங்கள்மீது வேதனையை இறக்கிவிட்டான். உங்களுக்குப் பாடமாகவும், இறையச்சமுடையோருக்கு படிப்பினையாகவும் அமையத்தக்க வேதனையை உங்கள் மீது இறக்கியுள்ளான். இவ்வாறு வேண்டுவதை விட்டும் நீங்கள் விலகிக்கொண்டால், அது உங்களுக்குத்தான் நல்லது. ஏனெனில் சிலவேளை உங்களுக்கு அவகாசம் அளித்து உடனுக்குடன் உங்களை பழிவாங்காமல் விட்டுவிடுவான். நீங்கள் மீண்டும் இவ்வாறு வேண்டினால், நம்பிக்கையாளர்களுடன் போரிட்டால் நாமும் அவர்களுக்கு மீண்டும் உதவி செய்து உங்களை வேதனைக்குட்படுத்துவோம். உங்களின் கூட்டத்தினர்களோ உதவியாளர்களோ உங்களுக்கு எந்தப் பயனையும் அளிக்க முடியாது. அவர்கள் ஆள்பலம் ஆயுத பலம் ஆகியவற்றில் அதிகமாகவும் நம்பிக்கையாளர்கள் குறைவாகவும் இருந்தாலும் சரியே. நம்பிக்கையாளர்களுக்கு உதவி செய்வதன் மூலம் அல்லாஹ் அவர்களுடன் இருக்கின்றான். அல்லாஹ் யாருடன் இருக்கின்றானோ அவர்களை யாராலும் மிகைக்க முடியாது.