ஸூரா Al-An'am, வசனம் 69

6:69

وَمَا عَلَى ٱلَّذِينَ يَتَّقُونَ مِنۡ حِسَابِهِم مِّن شَيۡءٖ وَلَٰكِن ذِكۡرَىٰ لَعَلَّهُمۡ يَتَّقُونَ ٦٩

69. (வீண் விவாதத்தில் மூழ்கிக் கிடக்கும்) அவர்களுடைய (செய்கையின்) கணக்கிலிருந்து எதுவும் இறையச்சமுடையவர்களின் பொறுப்பாகாது. எனினும், அவர்கள் (இதைத்) தவிர்த்துக் கொள்வதற்காக அவர்களுக்கு நல்லுபதேசம் செய்வது (இவர்கள் மீது) கடமையாகும்.

தஃப்ஸீர்

6.69. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சுபவர்கள் மீது இந்த அநியாயக்காரர்களைக் குறித்து எந்த கேள்விக் கணக்கும் இல்லை. இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சும்பொருட்டு இவர்கள் செய்துகொண்டிருக்கும் தீமைகளை விட்டும் தடுப்பதே அல்லாஹ்வை அஞ்சுபவர்கள் மீதுள்ள கடமையாகும்.