۞ وَلَهُۥ مَا سَكَنَ فِي ٱلَّيۡلِ وَٱلنَّهَارِۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ ١٣
13. (வானங்களிலோ, பூமியிலோ) இரவிலும், பகலிலும் வசித்திருப்பவை அனைத்தும் அவனுக்குரியனவே! அவன்தான் நன்கு செவியுறுபவனும், (அனைத்தையும்) நன்கறிந்தவனும் ஆவான்.
தஃப்ஸீர்
6.13. இரவிலும் பகலிலும் இருக்கும் எல்லாவற்றின் உரிமையும் அல்லாஹ்வுக்கே உரியதாகும். அவர்களது பேச்சுக்களை அவன் செவியேற்கக்கூடியவன். செயல்களை அவன் நன்கறிந்தவன். அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.