ஸூரா Ghafir, வசனம் 52

40:52

يَوۡمَ لَا يَنفَعُ ٱلظَّٰلِمِينَ مَعۡذِرَتُهُمۡۖ وَلَهُمُ ٱللَّعۡنَةُ وَلَهُمۡ سُوٓءُ ٱلدَّارِ ٥٢

52. அந்நாளில் அநியாயக்காரர்களுக்கு அவர்கள் கூறும் புகல்கள் ஒன்றுமே பயனளிக்காது. அவர்களுக்கு (இறைவனின்) சாபமும் உண்டு; அவர்களுக்குத் தீய இருப்பிடமும் உண்டு.

தஃப்ஸீர்

40.52. நிராகரித்தும் பாவங்கள் புரிந்தும் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்ட அநியாயக்காரர்களுக்கு அவர்கள் அநீதிக்கு கூறும் காரணங்கள் எந்தப் பயனையும் அளிக்காத நாளே அந்நாளாகும். அந்த நாளில் அவர்கள் அல்லாஹ்வின் அருளைவிட்டும் தூரமாக்கப்படுவார்கள். அவர்கள் மறுமையில் சந்திக்கும் வேதனைமிக்க தண்டனையால் தீய இருப்பிடத்தைப் பெறுவார்கள்.