فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فَهُمۡ فِي رَوۡضَةٖ يُحۡبَرُونَ ١٥
15. ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்கள் (மறுமையில் சொர்க்கத்திலுள்ள) உன்னதமாகச் சிங்காரிக்கப்பட்ட பூங்காவனத்தில் மகிழ்விக்கப்படுவார்கள்.
தஃப்ஸீர்
30.15. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொண்டு அவனுக்கு விருப்பமான நற்செயல்கள் புரிந்தவர்கள், என்றும் முடிவடையாத நிலையான அருட்கொடைகளைப் பெறுவதன் மூலம் சுவனத்தில் சந்தோசமாக இருப்பார்கள்.