هَٰذِهِۦ جَهَنَّمُ ٱلَّتِي يُكَذِّبُ بِهَا ٱلۡمُجۡرِمُونَ ٤٣
43. இதுதான் குற்றவாளிகள் பொய்யாக்கிக் கொண்டிருந்த நரகம்.
தஃப்ஸீர்
55.43. அவர்களிடம் கண்டிக்கும் விதத்தில் கூறப்படும்: இதோ குற்றவாளிகள் உலகில் பொய்ப்பித்துக் கொண்டிருந்த நரகம், அவர்களால் மறுக்க முடியாதளவு அவர்களின் கண் முன்னே உள்ளது.