يُرۡسَلُ عَلَيۡكُمَا شُوَاظٞ مِّن نَّارٖ وَنُحَاسٞ فَلَا تَنتَصِرَانِ ٣٥
35. (நீங்கள் அவற்றை விட்டும் வெளிப்பட விரும்பிச் சென்றால்) உங்கள் மீது அக்னி ஜூவாலையும், உருக்கப்பட்ட செம்பும் எறியப்படும். அதை நீங்கள் தடுத்துக்கொள்ள முடியாது.
தஃப்ஸீர்
55.35. -மனித, ஜின் சமூகமே!- உங்கள்மீது புகையற்ற தீப்பிழம்புகளும் தீப்பிழம்புகளற்ற புகையும் அனுப்பப்படும். நீங்கள் அதிலிருந்து தப்ப முடியாது.