ஸூரா An-Nisa, வசனம் 3

4:3

وَإِنۡ خِفۡتُمۡ أَلَّا تُقۡسِطُواْ فِي ٱلۡيَتَٰمَىٰ فَٱنكِحُواْ مَا طَابَ لَكُم مِّنَ ٱلنِّسَآءِ مَثۡنَىٰ وَثُلَٰثَ وَرُبَٰعَۖ فَإِنۡ خِفۡتُمۡ أَلَّا تَعۡدِلُواْ فَوَٰحِدَةً أَوۡ مَا مَلَكَتۡ أَيۡمَٰنُكُمۡۚ ذَٰلِكَ أَدۡنَىٰٓ أَلَّا تَعُولُواْ ٣

3. அநாதை(ப் பெண்களை திருமணம் செய்துகொண்டு, அவர்)கள் விஷயத்தில் நீதமாக நடக்க மாட்டோம் என நீங்கள் அஞ்சினால், மற்ற பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நான்கு நான்காகவோ நீங்கள் திருமணம் செய்துகொள்ளலாம். (அவ்வாறு பலரை திருமணம் செய்தால் அப்போதும் அவர்களுக்கிடையில் நீங்கள் நீதமாகவே நடந்துகொள்ள வேண்டும்.) நீங்கள் நீதமாக நடக்க முடியாதென பயந்தால் ஒரு பெண்ணை (மட்டும் திருமணம் செய்துகொள்ள வேண்டும்). அல்லது நீங்கள் வாங்கிய அடிமைப் பெண்ணையே போதுமாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் தவறு செய்யாமலிருப்பதற்கு இதுவே சுலபமா(ன வழியா)கும்.

தஃப்ஸீர்

4.3. உங்களின் பொறுப்பில் இருக்கும் அநாதைப் பெண்களைத் திருமணம் முடித்து, அவர்களுக்குரிய மணக்கொடையை குறைத்துவிடுவதனாலோ அல்லது மோசமாக நடந்துகொள்ளுவதனாலோ நியாயமாக நடந்துகொள்ள முடியாது என்று நீங்கள் அஞ்சினால் அவர்களை விட்டுவிட்டு மற்ற பெண்களில் நீங்கள் விரும்பியவர்களை இரண்டாகவோ மூன்றாகவோ நான்காகவோ மணமுடித்துக் கொள்ளுங்கள். அவர்களிடையே உங்களால் நியாயமாக நடந்துகொள்ள முடியாது என்று நீங்கள் அஞ்சினால் ஒருத்தியை மட்டும் போதுமாக்கிக் கொள்ளுங்கள் அல்லது உங்களிடம் இருக்கும் அடிமைப் பெண்களை அனுபவித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அடிமைப் பெண்களுக்கு மனைவிகளுக்குரிய உரிமைகள் அவசியமற்றது. அநாதைகளுடைய விடயமாகவும் ஒரு திருமணம் முடித்துக் கொள்வது அல்லது தன்னிடம் இருக்கும் அடிமைப் பெண்களைஅனுபவிப்பது சம்பந்தமாகவும் வசனங்களில் இடம்பெற்ற இந்த விடயங்களே நீங்கள் அநீதி இழைக்காமலிருப்பதற்கு மிக நெருக்கமானதாகும்.