كَتَبَ ٱللَّهُ لَأَغۡلِبَنَّ أَنَا۠ وَرُسُلِيٓۚ إِنَّ ٱللَّهَ قَوِيٌّ عَزِيزٞ ٢١
21. தானும், தன் தூதர்களுமே நிச்சயமாக வெல்வார்கள் என்று அல்லாஹ் விதித்து விட்டான். நிச்சயமாக அல்லாஹ் பலவானும் (அனைவரையும்) மிகைத்தவனும் ஆவான்.
தஃப்ஸீர்
58.21. “நானும் என் தூதர்களும் எங்களுடைய எதிரிகளுக்கு எதிராக ஆதாரத்தைக்கொண்டும் பலத்தைக் கொண்டும் வெற்றி பெற்றுவிடுவோம், என்று.” அல்லாஹ் முன்னரே தனது அறிவின் பிரகாரம் விதித்துவிட்டான். நிச்சயமாக தன் தூதர்களுக்கு உதவி செய்வதற்கு அல்லாஹ் ஆற்றலுடையவன். அவர்களின் எதிரிகளைத் தண்டிப்பதில் மிகைத்தவன்.