ஸூரா Al-Infitar, வசனம் 8

82:8

فِيٓ أَيِّ صُورَةٖ مَّا شَآءَ رَكَّبَكَ ٨

8. அவன் விரும்பிய (மிக்க அழகான) கோலத்தில் உன் அவயங்களைப் பொறுத்தினான்.

தஃப்ஸீர்

82.8. அவன் உன்னைப் படைக்க நாடிய வடிவத்தில் படைத்தான். அவன் உன்னைக் கழுதையின் வடிவத்திலோ, குரங்கின் வடிவத்திலோ, நாயின் வடிவத்திலோ, இன்னபிற விலங்குகளின் வடிவத்திலோ படைக்காமல் உன் மீது அருள்புரிந்தான்.