رَبَّنَآ إِنَّكَ جَامِعُ ٱلنَّاسِ لِيَوۡمٖ لَّا رَيۡبَ فِيهِۚ إِنَّ ٱللَّهَ لَا يُخۡلِفُ ٱلۡمِيعَادَ ٩
9. ‘‘எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ ஒரு நாளில் மனிதர்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பாய். அ(ந்நாள் வருவ)தில் சந்தேகமேயில்லை. (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் (தன்) வாக்குறுதியில் தவறுபவனல்ல'' (என்று கூறுவார்கள்.)
தஃப்ஸீர்
3.9. “எங்கள் இறைவா! நீ மக்கள் அனைவரையும் சந்தேகமற்ற ஒருநாளில் விசாரணை செய்வதற்காக ஒன்றுதிரட்டக்கூடியவனாக இருக்கின்றாய். அந்த நாள் நிச்சயமாக வரக்கூடியது. எங்கள் இறைவா! நீ ஒருபோதும் வாக்குறுதி மீறமாட்டாய்.”