ஸூரா Al-Imran, வசனம் 42

3:42

وَإِذۡ قَالَتِ ٱلۡمَلَٰٓئِكَةُ يَٰمَرۡيَمُ إِنَّ ٱللَّهَ ٱصۡطَفَىٰكِ وَطَهَّرَكِ وَٱصۡطَفَىٰكِ عَلَىٰ نِسَآءِ ٱلۡعَٰلَمِينَ ٤٢

42. (நபியே! மர்யமை நோக்கி) வானவர்கள் கூறிய சமயத்தில் ‘‘மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மை தேர்ந்தெடுத்திருக்கிறான். உம்மை பரிசுத்தமாகவும் ஆக்கியிருக்கிறான். உலகத்திலுள்ள பெண்கள் அனைவரையும்விட உம்மை மேன்மையாக்கியும் வைத்திருக்கிறான், (என்றும்)

தஃப்ஸீர்

3.42. தூதரே! வானவர்கள் மர்யமிடம் பின்வருமாறு கூறியதை நினைவுகூர்வீராக: “உம்முடைய நல்ல பண்புகளின் காரணமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்து குறைகளிலிருந்து உம்மைத் தூய்மைப்படுத்தியுள்ளான். உம் காலத்தில் வாழும் உலகிலுள்ள எல்லா பெண்களைக் காட்டிலும் அல்லாஹ் உம்மைச் சிறப்பித்துள்ளான்.