قَالَ يَٰقَوۡمِ لَيۡسَ بِي ضَلَٰلَةٞ وَلَٰكِنِّي رَسُولٞ مِّن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ ٦١
61. அதற்கவர் (அவர்களை நோக்கி), ‘‘என் மக்களே! நான் எத்தகைய வழிகேட்டிலும் இல்லை; மாறாக, நிச்சயமாக நான் உலகத்தார் அனைவரையும் படைத்து பரிபாலிக்கின்ற இறைவனுடைய ஒரு தூதன்'' என்று கூறினார்.
தஃப்ஸீர்
7.61. அவர் தம் சமூகத்தின் தலைவர்களிடம் கூறினார்: “நீங்கள் கூறுவதுபோல நான் வழிகெட்டவன் அல்ல. நான் என் இறைவன் காட்டிய நேரான வழியில் இருக்கின்றேன். என் இறைவனும் உங்கள் இறைவனும் அகிலுத்திலுள்ள அனைத்திற்கும் இறைவனுமான அல்லாஹ்விடமிருந்து உங்களின்பால் தூதராக அனுப்பப்பட்டுள்ளேன்.