لَقَدۡ أَرۡسَلۡنَا نُوحًا إِلَىٰ قَوۡمِهِۦ فَقَالَ يَٰقَوۡمِ ٱعۡبُدُواْ ٱللَّهَ مَا لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرُهُۥٓ إِنِّيٓ أَخَافُ عَلَيۡكُمۡ عَذَابَ يَوۡمٍ عَظِيمٖ ٥٩
59. நிச்சயமாக நாம் நூஹை அவருடைய மக்களுக்கு (நம்) தூதராக அனுப்பி வைத்தோம். அவர் (அவர்களை நோக்கி) ‘‘என் மக்களே! நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கில்லை. (இதற்கு நீங்கள் மாறு செய்தால்) உங்களுக்கு (வரக்கூடிய) மகத்தானதொரு நாளின் வேதனையை நான் பயப்படுகிறேன்'' என்று கூறினார்.
தஃப்ஸீர்
7.59. நாம் நூஹை அவருடைய சமூகத்தின்பால் அனுப்பினோம். அவர் அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும், அவனைத் தவிர வேறு யாரையும் வணங்கக்கூடாது என்பதன் பக்கம் அவர்களை அழைத்தார். அவர் கூறினார்: “என் சமூகமே அல்லாஹ்வை மட்டுமே வணங்குங்கள். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. நீங்கள் நிராகரிப்பில் நிலைத்திருந்தால் உங்கள் மீது மகத்தான நாளின் வேதனையை நான் அஞ்சுகிறேன்.”